search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்காட் மாரிசன்"

    இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
    புதுடெல்லி:

    உலகில் பல நாடுகளில் கோவிஷீல்டு உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால், கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றனர்.

    இதற்கிடையே, இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. 20 மாதத்துக்குப் பிறகு  ஆஸ்திரேலியா தனது எல்லைகளை திறந்துள்ளது. அதில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஆஸ்திரேலியா வருவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கோவேக்சின் தடுப்பூசி

    இந்நிலையில், இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்ததற்காக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்தற்காக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவுக்கு பிந்தைய நட்புறவில் இது ஒரு முக்கியமான படியாகும் என பதிவிட்டுள்ளார். 

    ஆஸ்திரேலியாவின் பிரதமராக பொருளாளர் ஸ்காட் மாரிசன் பதவியேற்க உள்ளார். #AustralianPM #ScottMorrison
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் ஸ்திரமற்ற தன்மை இருந்து வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர். தற்போது மால்கம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்து வருகிறார். லிபரல் கட்சியை சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரியான இவர் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்து வருகிறார்.

    தற்போது இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார்.


    ஆனால் அவருக்கு எதிராக ஆட்சியில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. உள்துறை மந்திரி பீட்டர் டட்டன் உள்ளிட்ட 3 மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அவர் மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அதில் தான் மீண்டும் போட்டியிடபோவதில்லை என மால்கம் டர்ன்புல் அறிவித்தார். அதன்படி அவர் போட்டியிடவில்லை. வெளியுறவு மந்திரி ஜுலி பிஷ்ப், பொருளாளர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர்.

    அவர்களில் ஸ்காட் மாரிசன் கூடுதல் ஓட்டுகள் பெற்றார். அதை தொடர்ந்து அவர் ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமர் ஆகிறார். ஆஸ்திரேலியாவில் வருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதுவரை இவர் பிரதமராக பதவி வகிப்பார். #AustralianPM #ScottMorrison
    ×